கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை உள்ளிட்ட நோய் தாக்குதலால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவர்களிடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து கிராமப்புறங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்துங்கள் என மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, மதுரை மாவட்டத்திற்கும், தமிழகத்திற்கும் தேவையான தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். கிடைக்கும் தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடிக்கும் மேலாக தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதில் 98 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிற மகிழ்ச்சிகரமான செய்தி வரவேற்கக் கூடியது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளும் அதிகபட்சமாக 3 நாள்களுக்கு போதுமானதாக இருக்கும் என்பதால் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ந்து மதுரை மாவட்ட மக்களின் சார்பில் மக்களின் உயிர் பாதுகாப்புக்காக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
கொரோனா நோயினால் உயிரிழப்பு ஏற்பட்டவர்களுடைய இறப்பு சான்றிதழை சீரான முறையில் அரசு வழங்கினால் தான் நிவாரண நிதிகள் எல்லாம் பெறமுடியும் என்பதை அரசு கவனத்தில் கொண்டு இறப்புக்கான சான்றிதழ் வழங்குவதை முறைப்படுத்தி வெளிப்படைத் தன்மையோடு வழங்கினால்தான் நிவாரணங்களை பெற முடியும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
கொரோனா நோயினால் பாதிப்படைந்து சிகிச்சைக்கு பின் முழுமையாக குணமடைந்த பின் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு கொரோனா இரண்டாவது அலையை வென்றெடுக்க மத்திய மாநில அரசுகள் போராடி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கருப்பு பூஞ்சை இன்னொரு சிக்கலை ஏற்படுத்தி வருவதை அரசு உன்னிப்பாக கவனித்து போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து மக்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் - சிவக்குமார்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.