18 வயது நிறைவான திருநங்கைகள் அனைவரையும் ஆதவற்றோர் என கருதி அரசு மாதந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி
ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் பேசிய அவர், பள்ளிப்பருவத்திலே திருநங்கைகளாக உணர்வதால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கவும், அதே போல திருநங்கைகளாக உள்ள அனைவரையும் வாரியத்தில் சேர்த்து அடையாள அட்டை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் அறிந்தவரை, தான் ஒரு திருநங்கை/திருநம்பி என்ற தன் மன உணர்வை வீட்டில் வெளிப்படுத்திய நாளில் இருந்தே அவர்கள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர்.
Also read... மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்குவதற்காக குழு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
எனவே 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு மாத உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், திருநங்கைகளில் பலர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக இருப்பதை பார்க்கிறேன். இந்தச்சூழலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருநங்கையர்களையும் பணியில் அமர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.