Home /News /tamil-nadu /

அனைத்து கோவில்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்ற நிலைப்பாட்டினை அரசு ஏற்படுத்த வேண்டும்: இயக்குநர் கௌதமன் கோரிக்கை

அனைத்து கோவில்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்ற நிலைப்பாட்டினை அரசு ஏற்படுத்த வேண்டும்: இயக்குநர் கௌதமன் கோரிக்கை

அனைத்து கோவில்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்ற நிலைப்பாட்டினை அரசு ஏற்படுத்த வேண்டும்: இயக்குநர் கௌதமன் கோரிக்கை

அனைத்து கோவில்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்ற நிலைப்பாட்டினை அரசு ஏற்படுத்த வேண்டும்: இயக்குநர் கௌதமன் கோரிக்கை

அனைத்து கோவில்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்ற நிலைப்பாட்டினை அரசு ஏற்படுத்த வேண்டும் என இயக்குநர் கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி கடந்த 60 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்து அரசு வரி வசூல் செய்து வரும் நிலையில் தொடர்ந்து இவர்களுக்கு பட்டா வழங்க அரசு மறுத்து வருகிறது.

இது குறித்து பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என்றும், பட்டா இல்லை என்பதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதால், உடனடியாக பட்டா வழங்க அரசு நடவடிக்கை வலியுறுத்தி தமிழ்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் வீரவாஞ்சி நகர் பொது மக்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Also read: முகநூல் மூலம் நூதன மோசடி: ரூ. 50 ஆயிரத்தை இழந்த மதுரை நபர்!

இதையெடுத்து போலீசார் போராட்டம் நடத்த அனுமதி இல்லை, கோரிக்கை மனு அளிக்க அனுமதி அளிப்பதாக கூறினர். இதையெடுத்து வ.கௌதமன் தலைமையில் அப்பகுதி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாரயணணிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இதனை தொடர்ந்து வ.கௌதமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 60 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அது தொடர்பாக கோரிக்கை மனு அளித்துள்ளோம். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது அடிப்படையில் பணி ஆணை வழங்கிய தமிழக அரசின் முடிவினை வாழ்த்துகிறேன்.

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதற்காக கல்லூரிகளில் படம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகத்தில் 36 ஆயிரம் கோவில்களும், 1600 பெரிய கோவில்களும் உள்ளதால் அதிகளில் அர்ச்சகர்கள். ஓதுவார்கள் தேவைப்படுகின்றனர்.

இட ஒதுக்கீடு முறையில் எல்லா சமூகங்களில் உள்ள இளைஞர்கள், பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வாய்ப்பு அளிக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்ற நிலைப்பாட்டினை அரசு ஏற்படுத்த வேண்டும், புதிய சட்டங்களை இயற்றுவதற்கு தான் சட்டமன்றம், அதற்கு தான் முதல்வர், சில கோமளிகள் உள்ளே புகுந்து அனைத்த சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தினை பறிக்க விட மாட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறலாம், குறிப்பாக சுப்பிரமணியசாமி சொல்வதை தமிழக அரசு தூக்கி குப்பையில் போட வேண்டும், அனைத்து கோவில்களிலும் தேவராம், திருவாசகம், திருமந்திரம் கேட்டு பாரூங்கள் அது ஒரு சொர்க்கம், ஆனால் இதுவரை நாம் கேட்ட சமஸ்கிருத பாடலில் ஒரு வார்த்தை கூட அர்த்தம் தெரியாது, அதனை பாடுபவர்களுக்கும் அர்த்தம் தெரியாது.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருப்போம், அனைத்து சாதியினரும், அர்ச்சகர் ஆகலாம், நீட் தேர்வு எதிர்ப்பு என்பதில் அரசு சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை என்பதனை உறுதி செய்யுங்கள், விவசாயம், மாணவர்கள், மீனவர்கள், தமிழ்மொழி, கல்வி உரிமை என அனைத்தையும் மீட்டெடுக்க உறுதியாக இருக்கும் என்றால் நாங்கள் துணையாக இருப்போம்.

தமிழ் கோவில்களில் தமிழர்கள் தான் அர்ச்சர்களாக இருக்க வேண்டும், தற்பொழுது பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 60 வயதில் ஓய்வு என்று தமிழக அரசு கூறியுள்ளது. அதே நிலைப்பாடு தற்பொழுது வரை அர்ச்சனை செய்யும் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்றார்.
Published by:Esakki Raja
First published:

Tags: Director Gowthaman

அடுத்த செய்தி