டிகிரி முடிச்சதும் எம்பிளாய்மெண்ட் ஆபீசுல பதிவு செஞ்சிட்டீங்களா? – உங்கள மாதிரி எத்தனை பேர் பதிவு செஞ்சிருக்காங்க தெரியுமா..

மாதிரிப்படம்

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 151 நபர்கள் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

 • Share this:
  தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read:  Job Alert : மத்திய ஆயுத காவல் படை வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

  அதில் 32 லட்சத்து 93 ஆயிரத்து 401 ஆண்களும், 37 லட்சத்து 36 ஆயிரத்து 687 பெண்கள், 257 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்.அதேப்போல், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 27 ஆயிரத்து 948 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 77 ஆயிரத்து 839 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11213 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேப்போல் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,37,077 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 42 ஆயிரத்து 151 நபர்களும்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 53 ஆயிரத்து 447 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: