அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் 50% பணியாளர்கள் இருக்க உத்தரவு

மாற்றுத்திறனாளி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் 50% பணியாளர்கள் இருக்க உத்தரவு
தமிழக அரசு
  • Share this:
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததையடுத்து இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்களில் அரசு அலுவலகங்களில் 33 சதவிகிதம் பணியாளர்கள் மட்டும் பணியாற்றினால் போதும் என்ற உத்தரவு தற்போது மாற்றப்பட்டு பழைய நடைமுறையே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. 

அதாவது அரசு அலுவலகங்களில் 50 சதவிகிதம் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஒரு பிரிவினரும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மற்றொரு பிரிவினர் என இரண்டு குழுக்களாக பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Also read... தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்துவதால் ஆபத்துகள்தான் அதிகம்..! எச்சரிக்கும் மருத்துவர்மாற்றுத்திறனாளி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading