நவம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று அறிவிப்பு

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பரிலும் ஊரடங்கு நீடிக்குமா? பள்ளிகள் திறக்கப்படுமா? முதல்வர் இன்று அறிவிப்பு
கோப்பு படம்
  • Share this:
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட நான்காம் கட்ட ஊரடங்கு, இன்றுடன் முடிகிறது. இதை முன்னிட்டு, கடந்த 28ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார்.

அப்போது, பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த முறை, திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேலும், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading