ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனமழையால் இடிந்து விழுந்த சமத்துவபுர வீடுகளின் மேற்கூரைகள்! - அச்சத்தில் பொதுமக்கள்

கனமழையால் இடிந்து விழுந்த சமத்துவபுர வீடுகளின் மேற்கூரைகள்! - அச்சத்தில் பொதுமக்கள்

தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது

தொகுப்பு வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது

சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் முறையான சாலை வசதியின்றி, சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கடலூர் மாவட்டம் ரூபநாராயண நல்லூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுர தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமடைந்து மேற்கூரைகள் இடிந்து விழுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது வீடுகளின் மேற்கூரைகள் அதிகமாக பெயர்ந்து விழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்றிரவு பெய்த மழையில் ஆறுமுகம் என்பவர் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் வெளியிலேயே வசித்துள்ளார்.

இதே நிலைதான் சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளிலும் நிலவுவதாகவும், இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கூரை விழுந்து பலர் காயமடைந்துள்ள நிலையில் பெரும் விபத்து நடப்பதற்கு முன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடு

அதுமட்டுமின்றி சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் முறையான சாலை வசதியின்றி, சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தேர்வு

First published:

Tags: Cuddalore, Rain