Home » News » Tamil-nadu » GOVT HAS TOLD HC IT HAS BEEN DENIED PERMISSION TO EXPAND SUN PHARMA WHICH OPERATES NEAR THE VEDANTHANGAL VIN MD

'சன் பார்மா' நிறுவனம் விரிவாக்கம் செய்ய அனுமதி மறுப்பு - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

வேடந்தாங்கல் சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் 'சன் பார்மா' நிறுவனம் விரிவாக்கம் செய்ய அனுமதி மறுக்கபட்டு விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'சன் பார்மா' நிறுவனம் விரிவாக்கம் செய்ய அனுமதி மறுப்பு - நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னை உயர்நீதிமன்றம்.
  • Share this:
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கிய சரணாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சரணாலயம் அருகே செயல்பட்டு வரும் சன் பார்மா நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டவிட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also read... தடை செய்யப்பட்ட பிறகும் ஆன்லைனில் அமோகமாக நடக்கும் மாஞ்சா நூல் விற்பனை


மேலும், சரணாலயம் அமைந்திருக்கு பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ என்ற சுற்றுப்பரப்பளவை 3 கி.மீட்டராக குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், வேடந்தாங்கள் நிலபரப்பு குறைக்கபடுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அரசிடம் மனு அளித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading