இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரின் முடிவு தெரியாமல், மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

மருத்துவர் கனவில் இருக்கும் மாணவர்களின் வலி தங்களுக்கு புரியாதா என கேள்வி எழுப்பியதுடன், ஏன் ஒரு மாதத்துக்கு மேலாக தாமதம் ஆகிறது என கூறி நீதிபதி கிருபாகரன் கண் கலங்கினார்.

இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரின் முடிவு தெரியாமல், மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
மதுரை உயர் நீதிமன்றம்
  • News18
  • Last Updated: October 16, 2020, 5:41 PM IST
  • Share this:
இடஒதுக்கீடு குறித்து ஆளுநரின் முடிவு தெரியாமல், மருத்துவக் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெறாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இந்தாண்டே அமல்படுத்த கோரிய வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா பரிசீலனையில் இருப்பதாக கூறினார். இதை கேட்ட நீதிபதி கிருபாகரன், மருத்துவர் கனவில் இருக்கும் மாணவர்களின் வலி தங்களுக்கு புரியாதா என கேள்வி எழுப்பியதுடன், ஏன் ஒரு மாதத்துக்கு மேலாக தாமதம் ஆகிறது என கூறி கண் கலங்கினார்.


Also read... உயிரோடு இருக்கும்போதே குளிர்பதன பெட்டிக்குள் 24 மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு...!

ஜல்லிக்கட்டு போன்று மீண்டும் ஒரு மாணவர் எழுச்சியை கொண்டு வந்துவிட வேண்டாம் எனவும் எச்சரித்தார். தொடர்ந்து விளக்கம் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது என தெரிவித்தார்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading