Home /News /tamil-nadu /

புதிய பேருந்துகளை இழப்பீடாக வழங்க வேண்டும் - ஓய்வு பெற்ற நடத்துனர்கள் வழக்கு

புதிய பேருந்துகளை இழப்பீடாக வழங்க வேண்டும் - ஓய்வு பெற்ற நடத்துனர்கள் வழக்கு

கோப்புப் படம்

கோப்புப் படம்

விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக இயக்குனருக்கு இந்த வழக்கு குறித்து 8 வார காலத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
பணிகொடை உள்ளிட்ட ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்காததால் புதிய பேருந்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம், வேலூர் மண்டலத்தில் நடத்துனர்களாக பணியாற்றிய பக்தவச்சலம், கடந்த பிப்ரவரி மாதமும், ராதாகிருஷ்ணன் கடந்த மே மாதமும் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

பக்தவச்சலத்திற்கு பணி கொடை உள்ளிட்ட ஓய்வு கால பலன்களாக 9.74 லட்சம் ரூபாயும், ராதாகிருஷ்ணனுக்கு 18.21 லட்சம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும். பணி கொடை சட்டத்தின் படி ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும்.

ஆனால், தங்களுக்கு குறித்த காலத்தில் அவை வழங்கப்படாததால், 18% வட்டியுடன் அந்த தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் அல்லது அதற்கு பதிலாக புதிய பேருந்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், வழக்கு குறித்து 8 வார காலத்திற்குள் பதிலளிக்க விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க... நெருங்க முடியாத கிக் பாக்சரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த கும்பல்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Bus, Chennai, High court

அடுத்த செய்தி