தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகச் செல்வது ராஜாஜி காலத்திலேயே தொடங்கி இல.கணேசன் வரை தொடர்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த கையோடு மேற்குவங்க மாநில ஆளுநராக ராஜாஜியை நியமித்தார் நேரு. அதனைத் தொடர்ந்து வெவ்வேறு கால கட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர்களும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம், பி.சுப்பராயன், பா.ராமச்சந்திரன், ஜோதி வெங்கடாசலம், ஈ.எஸ்.எல்.நரசிம்மன், ஜி.ராமானுஜம் என்று பலரும் ஆளுநர்களாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் ஒருமுறை தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்திருக்கிறார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரான எம்.ஓ.ஹெச்.ஃபரூக் மரைக்காயர் கேரளா, ஜார்கண்ட் மாநில ஆளுநராக காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.
இப்படி காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சண்முகநாதன் பாஜக ஆட்சிக்காலத்தில் மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களுக்கு ஆளுநராக்கப்பட்டார். வயதில் மிகவும் இளையவரான டாக்டர் தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் செயல்பட்டுவருகிறார்.
பிறகு தமிழ்நாட்டிலிருந்து இல.கணேசன் மணிப்பூருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு மேற்கு வங்க மாநில ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்த இல.கணேசன், மணிப்பூரிலிருந்து நாகாலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். அந்த வரிசையில் தமிழ்நாட்டிலிருந்து மற்றொரு பாஜக தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CP Radhakrishnan, Governor, Ila Ganesan, Tamil Nadu, Tamilisai