7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்லமுடிவை அறிவிப்பார் - ஆளுநரைச் சந்தித்தப் பின் அமைச்சர் ஜெயக்குமார்

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்லமுடிவை அறிவிப்பார் - ஆளுநரைச் சந்தித்தப் பின் அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் இன்று மதியம் 12.15 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினர். மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் ஒப்புதல் தொடர்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒன்னறை மணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவ, மாணவிகள் மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்து மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்து இருந்தோம்.

முதல்வரின் ஒப்புதலோடு அமைச்சர்கள் இன்று ஆளுநரை சந்தித்தோம். ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதற்காக நாங்கள் சந்தித்தோம். ஒப்புதல் அளித்தால் சிறப்பாக இருக்கும் விரைந்து மருத்துவ கலந்தாய்வு நடத்த முடியும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தோம். பரிசீலனையில் உள்ளது நிச்சயமாக நல்ல முடிவை நான் அறிவிப்பேன் என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.


விரைந்து முடிவெடுத்து நல்ல முடிவை அறிவிப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. அவருடைய பரிசீலனையில் உள்ளது விரைந்து நல்ல முடிவை அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார். 7.5 சதவீத மசோதாவிற்கு ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே மருத்துவ கலந்தாய்வை நடத்த முடியும் என்பதையும் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம். இவற்றை கவனத்தில் கொள்வதாகவும் விரைந்து முடிவெடுத்து அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published: