முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலமைச்சரின் பணி நேரம்... ஆளுநரின் தேநீர் விருந்து.. முதலமைச்சர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

முதலமைச்சரின் பணி நேரம்... ஆளுநரின் தேநீர் விருந்து.. முதலமைச்சர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

முதலமைச்சர் உரை

முதலமைச்சர் உரை

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

குடியரசு தினத்தன்று அரசு பிரதிநிதிகள், தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்தளிப்பது வழக்கம். இந்த முறை நடந்த தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" என்ற தலைப்பின் கீழ் வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். அதில், ஆளுநரின் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கிற ஒரு நடைமுறை. மக்களாட்சியின் மாண்மைப்  காக்கவே அதில் பங்கேற்றேன். ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது என்பது எந்த அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதலமைச்சருக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என ஆபீஸ் டைமிங் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு கனமழை பெய்தபோது தீவிர முன்னெச்சரிக்கை எடுத்ததன் மூலம், சென்னை மக்கள் நிம்மதியாக இருந்ததாக கூறினார். தொடர்ந்து, நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் அமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய சட்ட அமைச்சருக்கும் நடக்கும் மோதல் பற்றிய கேள்விக்கு, அது ஆரோக்கியமானது அல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார்.

First published:

Tags: CM MK Stalin