ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“ஏன் அம்மா பேச்ச கேக்கனும்.?” ஆளுநர் தமிழிசையிடம் படாரென கேள்விகேட்ட 3ம் வகுப்பு மாணவன்!

“ஏன் அம்மா பேச்ச கேக்கனும்.?” ஆளுநர் தமிழிசையிடம் படாரென கேள்விகேட்ட 3ம் வகுப்பு மாணவன்!

தமிழிசை

தமிழிசை

கோவையில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தை பற்றி நினைவு கூர்ந்த தமிழிசை, தன்னை ஆளுநர் என்று நம்பவே ஒரு சிறுமி மறுத்ததாக குறிப்பிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தாங்கள் ஏன் பெற்றோர் பேச்சை கேட்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம் பள்ளி மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு தமிழிசை அறிவுப்பூர்வமாக பதிலளித்தார்.

கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேடையில் இருந்த தமிழிசையிடம், தாங்கள் கவர்னராக உருவானது எப்படி என்றும், கவர்னர் பதவிக்கு வரவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்றும் சுவாரஸ்யமான கேள்விகளை மாணவர்கள் முன்வைத்தனர்.

அப்போது 3ம் வகுப்பு மாணவர் ஒருவர் தான் ஏன் எனது அம்மா சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும் என தமிழிசையிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், நீ மட்டும் இல்ல எல்லாரும் அவங்க அம்மா பேச்ச கேக்கனும் என அறிவுப்பூர்வமாக பதிலளித்தார்.

அதேபோல் கோவையில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தை பற்றி நினைவு கூர்ந்த தமிழிசை, தன்னை ஆளுநர் என்று நம்பவே ஒரு சிறுமி மறுத்ததாக குறிப்பிட்டார். அதற்கு “ஏன் என்னை கவர்னர் என நம்ப மறுக்கிறாய் என கேட்டேன். அதற்கு அவர் வயதானவர்கள் தான் கவர்னராக இருக்க முடியும் நீங்கள் கவர்னராக வாய்ப்பில்லை என சொன்னார். குழந்தைகள் மனதில் வயதானவர்கள் தான் கவர்னராக முடியும் என ஒரு தோற்றம் உள்ளது” என கூறினார்.

First published:

Tags: Governor, School students, Tamilisai Soundararajan