7.5% இடஒதுக்கீடுக்கு ஆளுநர் எடுத்துக்கொண்ட காலஅவகாசம் போதுமானது: உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - பா.ஜ.க தலைவர் வலியுறுத்தல்

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எடுத்துக்கொண்ட கால அவகாசம் போதுமானது என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

7.5% இடஒதுக்கீடுக்கு ஆளுநர் எடுத்துக்கொண்ட காலஅவகாசம் போதுமானது: உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும் - பா.ஜ.க தலைவர் வலியுறுத்தல்
எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்
  • Share this:
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்றைய காலத்தில் மனுதர்மம் என்பது கிடையாது என்று கூறிய அவர் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் மட்டுமே நாட்டில் உள்ளதாக தெரிவித்தார். மனுசாஸ்த்திரத்தில் இருப்பதாக கூறி பெண்களை இழிவுப்படுத்தியவர்களுக்கு பெண்கள் தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பார்கள் என்று கூறிய அவர் இதனைக் கண்டித்து தமிழக பா.ஜ.கவின் மகளிர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக் கட்சியினர் முன்மொழிவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதில் அளித்த அவர் முதல்வர் வேட்பாளர் குறித்து தங்கள் கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் எடுத்துக் கொண்ட கால அவகாசம் போதுமானது. ஆளுனர் உடனடியாக 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்க்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading