Home /News /tamil-nadu /

வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - ஆளுநர்

வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - ஆளுநர்

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

Tamil Nadu Assembly : வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஆளுநர் தமது உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஆளுநர் தமது உரையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் உரையாற்று வருகிறார். அவர் தமது உரையில், 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி. இந்த ஆண்டு மகிழ்ச்சியும், வளம்மும் பெருக வேண்டும். கொரோனா இரண்டாம் அலையை சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினார் முதலமைச்சர்.

    மெகா தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 86% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசின் ஒத்துழைப்பிற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. கொரோனா பேரிடருக்கான 541.64 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    கொரோனா நோயாளிகள் 33117 நபர்கள் முதலமைச்சரின் விரிவாக மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். கொரோ தொற்றை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

    மாநிலத்தில் பொருளாதாரமும் மக்கள் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிப்படையாமல் கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    Read More : அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்று கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Governor, MK Stalin, RN Ravi, TN Assembly

    அடுத்த செய்தி