Home /News /tamil-nadu /

சட்டமன்ற உரைக்குப் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி பயணம்

சட்டமன்ற உரைக்குப் பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி பயணம்

தமிழக ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ரவி

Governor RN Ravi : சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய பின்னர் 2 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    தமிழக சட்டப்பேரவையின் 2022ஆம் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையோடு இன்று தொடங்குகிறது. இதில் தொடக்க உரையை நிகழ்த்திவிட்டு பிற்பகலில் விமானம் மூலம் கோவை சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை 6 மணிக்கு ஊட்டி சென்றடைகிறார்.

    ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கும் அவர், வெள்ளிக்கிழமை காலை ஊட்டியில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு வனவியல் கல்லூரி நிகழ்ச்சியிலும், அதைத்தொடர்ந்து கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கலை & அறிவியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

    அன் பின்னர் அன்று மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். வழக்கமாக ஆளுநர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டிக்கு வந்து திரும்பிச் செல்லும் வழக்கமிருந்தது. கடந்த மாதம் குன்னூரில் நடந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.

    Read More : அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் அதிகமாகும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

    இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் முக்கிய விருந்தினர்களின் பயண வழிகாட்டு நெறிமுறை புத்தகமான நீல புத்தகத்தில் மிக அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் நீலகிரியில் வான்வழி பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    Must Read : கொரோனா காலத்தில் யோகா உதவியாக இருக்கும் - தமிழிசை செளந்தரராஜன்

    இதன்காரணமாகவே ஆளுநர் ரவி சாலை மார்க்கமாக கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார். ஆளுநரின் வருகையையொட்டி அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ooty, RN Ravi, TN Assembly

    அடுத்த செய்தி