Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திராவிட மாடல் முதல் பெண்ணுரிமை வரை..சட்டமன்ற உரையில் ஆளுநர் தவிர்த்த வார்த்தைகள்...!

திராவிட மாடல் முதல் பெண்ணுரிமை வரை..சட்டமன்ற உரையில் ஆளுநர் தவிர்த்த வார்த்தைகள்...!

ஆளுநர் - முதலமைச்சர்

ஆளுநர் - முதலமைச்சர்

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் மக்கள் அரசின் கொள்கைகளை விளக்கினார். அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் திராவிட மாடல் உள்ளிட்ட வரிகள் இடம்பெற்ற நிலையில், அது ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆங்கில உரையில் இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் புறக்கணித்ததாக சட்டமன்றத்தில் குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

ஆளுநர் தனது பேச்சில் திராவிட மாடல், மத நல்லிணக்கம் ஆகிய வார்த்தைகளை தவிர்த்தார். 48 பக்கங்கள் கொண்ட ஆளுநர் உரையில் 2 இடங்களில் திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார் போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது என்ற பத்தியை முழுவதுமாக தவிர்த்தார். அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற பத்தியையும் வாசிக்காமல் விட்டுவிட்டார்.

சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய வார்த்தைகளையும் அவர் தவிர்த்தார். தமிழ்நாடு அரசு என்ற வார்த்தையை இந்த அரசு என்று மாற்றிப் படித்தார். சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளைக் கொண்ட மிகச்சிறந்த ஆட்சி முறை என்ற பத்தி ஆளுநர் பேச்சில் தவிர்க்கப்பட்டுள்ளது. சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்க கொள்கைகளே அரசின் அடித்தளம் என்ற வரியையும் புறக்கணித்தார்.

இதனையடுத்து, முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த சபாநாயகர் அப்பாவு, அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என அறிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi, TN Assembly