ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி - ஆளுநர் ஆர்.என்.ரவி

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் ஒரே கலாச்சாரம் என்ற நிலை வர வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Varanasi, India

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டுக்கும், வாரணாசிக்கும் இடையேயான கலாச்சார இணைப்பை வெளிப்படுத்தும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, வாரணாசியில் கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியது. இதில், கலாச்சார இணைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன் ரெட்டி, எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் தமிழில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ் மக்களின் இதயங்களில் காசி வாழ்வதாகவும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் போதுமானவையல்ல.. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, நாடு முழுவதும் ஒரே கலாச்சாரம் நிலவிவருவதாக தெரிவித்தார். வடக்கு, தெற்கு என்று பாகுபாடு இல்லாமல், நாடு முழுவதும் ஒரே கலாச்சாரம் என்ற நிலை வர வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

First published:

Tags: PM Modi, RN Ravi, Varanasi