ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும், எல்லோருக்காகவும்’ - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

‘ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும், எல்லோருக்காகவும்’ - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

ஆளுநர் ஆர்.என். ரவி

ஆளுநர் ஆர்.என். ரவி

RN Ravi : தேசத்தை இனி நாம் பன்முகத்தன்மை கொண்டதாக பார்க்கவில்லை, அதை ஒன்றாக தான் பார்க்கிறோம் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் 58 வது நிறுவன நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில்,  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.  அப்போது, இந்த நிறுவனம் நல்ல பெயரை பெற்றுள்ளது. அரசு கட்டமைப்புகள் உறுதியானதாக இருக்க இந்த நிறுவனம் உதவி வருகிறது. இல்லையென்றால் நிறைய தேசிய வளம் வீணாகும். அறிவியலுக்கு எல்லைகள் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் மும்முரமாக இருப்பதால் சுற்றி நடப்பது பற்றி தெரியாமல் இருப்பார்கள்.

உங்கள் இருத்தலின் சூழலை புரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோரும் நமது தேசத்துக்காக தான் இருக்கிறோம். நாம் தேசத்தை பார்க்கும் விதம், தேசத்தின் பிரச்னைகளை பார்க்கும் விதம் இவற்றில் 2014ம் ஆண்டு முதல் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளன.

நமது வளர்ச்சி திட்டம் என்பது ஐந்தாண்டு திட்டமாக இருந்தது. ஒரு பிரச்னைக்கு நிரந்தர நீண்டகால தீர்வு இல்லாமல் சிறு சிறு தீர்வுகள் மட்டும் யோசிக்கப்பட்டன.

தேசத்தை இனி நாம் பன்முகத்தன்மை கொண்டதாக பார்க்கவில்லை. நாம் அதை ஒன்றாக தான் பார்க்கிறோம். எல்லாருக்கும் சமமான வாய்ப்புகள் எல்லாம் கிடைக்க வேண்டும்.

அதனால் தான் முதலில், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. பன்முகத்தன்மை கொண்ட பார்வை இருந்ததால் ஒவ்வொரு பகுதிக்கும் என்ன கிடைத்தது என்பதில் பாகுபாடு இருந்தது.

ஏழுபது ஆண்டுகளாக இப்படி தான் இருந்துள்ளது. 2047க்குள் பாரதம் உலக தலைவராக மாற வேண்டும். இந்த இலக்கு ஒவ்வொரு இந்தியனின் ஒத்துழைப்புடன் தான் நடக்கும்.‘ஒரே பாரதம், உன்னத பாரதம், எல்லோருடனும், எல்லோருக்காகவும்’ என்று (தமிழில்) கூறினார்.

மேலும், நீங்கள் உங்களையே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக்கு எல்லை இல்லை. நமது நாட்டில் நிலநடுக்கம் அதிகம் நடைபெற வாய்ப்புள்ள வட கிழக்கு மாநிலங்கள் உள்ளன.

வீட்டை இழந்த ஒருவர் மீண்டும் வீடு கட்ட மிகவும் செலவாகும். நடுத்தர குடும்பத்தில் இருப்பவர், ஏழையாக மாறிவிடுகிறார். அதற்கு ஏதாவது செய்ய முடியுமா என யோசியுங்கள். நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன.

அரசு insensitive ஆக இருக்கும் இயல்பு கொண்டது. ஒரு நிலநடுக்கம் என்றால், இழப்பு சேதம் எவ்வளவு என மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதும், பிறகு ஒரு குழு வந்து ஆய்வு செய்வார்கள்,  5 ஆயிரம் கோடி சேதம் என் கூறுவார்கள், பணம் மரத்தில் காய்ப்பதில்லையே. இவை எல்லாம் அதிகாரிகளின் நடைமுறை. இவை ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் அரசை தாண்டி யோசிக்க வேண்டும்.

தேசத்தை ஒற்றை அலகாக பார்ப்பதன் பலன்களை பார்த்து வருகிறோம். இன்று பொது வெளியில் யாரும் மலம் கழிப்பதில்லை.

பாலின பாகுபாடு மிக மோசமாக இருந்தது. ஆனால் தற்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில மாதிரி ஆய்வுகளின் முடிவுகள் அதையே குறிக்கின்றன.

பெண்கள் பாதுகாப்பு படையில் தடை செய்யப்பட்டிருந்தார்கள். அவர்கள் தற்போது பாம்பர் ஏர்கிராப்ட் செலுத்துகிறார்கள். இவை எப்படி நடந்தது. அடிப்படை மாற்றம் காரணமாக.

கடந்த ஆறு ஏழு ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என பாருங்கள். இந்த அரசு என்பது மக்கள் தான்.

அரசின் அழகு என்பது குடிமக்களின் ஆற்றலுக்கு எதிர்மறை சக்தியாக இல்லாமல் இருப்பது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதிகளும் கட்டுப்பாடுகளும் மக்கள் வளர்ச்சியை தடை செய்தன.

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்பு 400 தான் இருந்தன. தற்போது 70,000 உள்ளன. நமது இளைஞர்கள் வளர, துணிந்து செயல்பட வாய்ப்பு தர வேண்டும். சுதந்திரத்துக்கு பிறகான ‘அம்ருத் கால்’ நடைபெற்று கொண்டிருக்கிறது. 50 கோடி மக்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உள்ளனர். ஒரு  நோய் வந்தால் அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக குறைந்து போகாது. அதே போல், மக்களின் வீடுகள் உறுதியாக இருக்க வேண்டும். அதை செய்யும் மந்திர கோல் அரசிடம் இல்லை. உங்களிடம்தான் உள்ளது என்று ஆளுநர் ஆர்.என் ரவி கூறினார்.

Must Read : ஆன்லைன் ரம்மிக்கு விரைவில் தடை சட்டம்? ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் பரிந்துரை குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

இந்த விழாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தவல்லி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Published by:Suresh V
First published:

Tags: RN Ravi, Tamil Nadu Governor