ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தேசிய கீதத்தில் திராவிடத்தை தவிர்த்துவிடுவாரா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அன்புமணி கேள்வி..!

தேசிய கீதத்தில் திராவிடத்தை தவிர்த்துவிடுவாரா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அன்புமணி கேள்வி..!

ஆளுநர் - அன்புமணி

ஆளுநர் - அன்புமணி

தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி, பாடாமல் தவிர்த்து விடுவாரா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில் ஜனவரி 9ம் தேதி, பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற திராவிட மாடல் உள்ளிட்ட சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதையடுத்து, ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் "நொய்யல் ஆற்றை மீட்போம்" என்ற கருத்தரங்கு கோவையில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் அன்புமணி கோவை சென்றார். அப்போது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்ற முதற்கட்ட முயற்சியை எடுத்துள்ளோம் என்று கூறினார். இதற்காக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும், நொய்யல் ஆறு நன்றாக இருந்தால் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும் எனவும் தெரிவித்தார்.

அப்போது, ஆளுநர் சர்ச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஆளுநர் அரசியல் செய்யக்கூடாது எனவும், தமிழ்நாடு அரசும் ஆளுநரை மதிக்க வேண்டும் என்றும கூறினார். மேலும், ஆளுநரும் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

First published:

Tags: Pmk anbumani ramadoss, RN Ravi, TN Assembly