மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துவதால் அந்த விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதன் கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பட்டமளிப்பு விழாவை பொறுத்தவரை வேந்தர், இணை வேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினர் பங்கேற்பார் என்றும், ஆனால் கவுரவ விருந்தினர் என்ற பெயரில் யாரையும் அழைப்பதில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திராவிடம் என்றாலே மிரளுகின்றனர்... ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக எம்பி டி.ஆர். பாலு கண்டனம்
இதுகுறித்து ஆளுநர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்தும் எந்த பதிலும் வராததால், பட்டமளிப்பு விழாவை தாம் புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு ஆளுநர் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்பவராக இருப்பதாக விமர்சித்தார். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் இந்தியாவில் வேறுபாடே இல்லை என ஆளுநர் பேசியிருப்பதாகவும், புத்த மதம் தோன்றியது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார். வரலாற்றை ஆளுநர் புரட்டிப் பார்க்க வேண்டும் எனவும் பொன்முடி வலியுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Ponmudi, RN Ravi