ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"தமிழ்நாடு ஆளுநர்" எனக் குறிப்பிட்டு பொங்கல் வாழ்த்து சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி!

"தமிழ்நாடு ஆளுநர்" எனக் குறிப்பிட்டு பொங்கல் வாழ்த்து சொன்ன ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு அளுநர் ஆர்.என்.ரவி

தற்போது ஆளுநர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் எனக் குறிப்பிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை என்று தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால  கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்." என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனச் சொல்வதே சரியானது எனக் ஆளுநர் ரவி குறிப்பிட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகை பொங்கல் விருந்து அழைப்பிதழிலும், தமிழ்நாடு அரசின் இலட்சினையைப் புறக்கணித்தாக ஆளுநரின் பொங்கல் விருந்தை ஆளுங்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன.

ஆளுநர் வாழ்த்து

இந்நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வந்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

First published:

Tags: Pongal 2023, RN Ravi, Tamilnadu government