Home /News /tamil-nadu /

பரபரப்பான சூழலில் இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி

பரபரப்பான சூழலில் இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழக ஆளுநர் ரவி

தமிழக ஆளுநர் ரவி

Governor RN Ravi : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் பயணமாக, இன்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாததால், சமீபத்தில் ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்கவில்லை. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் தமிழக அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

    இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை அருகே தருமபுரி ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஆளுநரின் வருகைக்கு, நடந்த போராட்டத்தின்போது, பாதுகாப்பு வாகனங்களை நோக்கி கருப்புக் கொடி மற்றும் பதாகைகளை வீசப்பட்டது.

    இத்தகைய பரபரப்பான சூழலில், இரண்டு நாள் பயணமாக ஆளுநர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.30 மணி அளவில் டெல்லிக்கு புறப்படுகிறார். இந்த பயணத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்கும் ஆளுநர், நீட் விலக்கு மசோதா உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி நேற்று கருப்புக் கொடி வீசப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள ஒரு மாநிலத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டதாக கவலை தெரிவித்துள்ளார்.

    வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Read More : சாப்பிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டலை சூறையாடிய திருநங்கைகள் - விழுப்புரத்தில் பரபரப்பு

    இந்நிலையில், ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண குடிமக்களை அரசு எப்படி பாதுகாக்கும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்றும் அவர் வினவியுள்ளார்.

    Must Read :  நானே ஈபிஎஸ் கார்ல ஏறப்போனேன்.. உதயநிதி கலகல ‘நச்’ கமெண்ட் அடித்த அன்பில் மகேஷ்

    இதேபோல ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், ஆளுநரின் கார் மீது கறுப்புக் கொடி வீசியது ஏற்புடையது அல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் போராட்டம் நடத்திய 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Neet Exam, RN Ravi, Tamil Nadu Governor

    அடுத்த செய்தி