ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டெல்லிக்கு மீண்டும் விசிட் அடிக்கும் தமிழ்நாடு ஆளுநர்.. அமித் ஷாவுடன் சந்திப்பு..?

டெல்லிக்கு மீண்டும் விசிட் அடிக்கும் தமிழ்நாடு ஆளுநர்.. அமித் ஷாவுடன் சந்திப்பு..?

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோலவே பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர்  வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய புகார் கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் சட்ட அமைச்சர் ரகுபதி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சமர்ப்பித்தனர். அதில் ஆளுநர் வரம்பை மீறி செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.  இந்த புகார் கடிதத்தை நடவடிக்கைக்காக உள் துறை அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவர் அனுப்பிவைத்தார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரெனெ டெல்லி சென்றார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை, யாரையும் சந்திக்கவில்லை. தன்னுடைய உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு உடனே சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஆளுநர் மீண்டும் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு தமிழ்நாட்டு விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேசவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

First published:

Tags: Amit Shah, RN Ravi