ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை - கவர்னரின் பொங்கல் விழா அழைப்பிதழ் குறித்து ராமதாஸ் ட்வீட்!

இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை - கவர்னரின் பொங்கல் விழா அழைப்பிதழ் குறித்து ராமதாஸ் ட்வீட்!

ராமதாஸ்

ராமதாஸ்

கவர்னர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தின. இந்த சூழலில் நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக இந்த அரசு எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் முன்மொழிந்த நிலையில், ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார்.

இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே, பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழ் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து அளித்தது. தமிழ்நாடு அரசின் இலச்சினை அதில் இடம்பெற்றதோடு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதில் இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை. ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு இல்லை, தமிழ் மாதம் இல்லை, தமிழ்நாடு இல்லை, தமிழ்நாடு அரசின் இலச்சினை இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

 ராமதாஸ் ட்வீட்!

First published:

Tags: Dr Ramadoss, RN Ravi, Tamilnadu