Home /News /tamil-nadu /

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கம்

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கம்

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

NEET Exam Bill | TN Governor RN Ravi | நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

    நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் மக்களவையில் திமுக எம்.பிகள் முழக்கமிட்டனர்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1-ம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.



    நீட் மாசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அவருக்கு எதிராக தமிழக எம்.பிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை 2-வது திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரமில்லை . 5 மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துவிட்டு தற்போது திருப்பி அனுப்பியது எந்த வகையில் நியாயம் என்று மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Neet Exam, RN Ravi

    அடுத்த செய்தி