ஸ்ரீரங்கம் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. அதற்காக தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று விமானம் மூலம் திருச்சி வருகை புரிந்தார்.
பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த மரக்கன்று நடும் விழா, பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்கள் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இன்று காலை குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார்.
ரங்கா ரங்கா கோபுரம் முன்பு ஆளுநருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பட்டர்களால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் யானை ஆண்டாளிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
Also read... பத்திரிக்கையாளர் நல வாரியம் விரைவில் முழு செயல்பாட்டிற்கு வரும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!
அதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ராமானுஜர் சந்நதி, கருடாழ்வார் சந்நதி, மூலஸ்தானத்தில் ரெங்கநாதர் மற்றும் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை (உற்சவர்) உள்ளிட்ட அனைத்து சந்நதிகளுக்கும் சென்று வழிபாடு செய்தார்.
அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : இ.கதிரவன், திருச்சி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Srirangam, Tamil Nadu Governor