டெல்லி விரைந்த ஆளுநர் பன்வாரிலால்... புதிய ஆளுநர் நியமனம்?

பிரதமருடன் ஆளுநர்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார்.

 • Share this:
  மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின்பேரில், பன்வாரிலால் புரோகித் நேற்றிரவு அவசரமாக டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியை, இன்று மாலை 4 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வையும் சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்தில் ஆளுநர் மாற்றப்பட்டு, புதிய ஆளுநராக ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறீர்களா?

  மேலும், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய அமைச்சராகவும், அண்ணாமலை, தமிழக பாஜக தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு, எழுவர் விடுதலை ஆகிய விவகாரங்கள் தீவிரமாக உள்ள நிலையில், பிரதமரின் அறிவுறுத்தல்படி, இதுதொடர்பான அறிக்கையை ஆளுநர் வழங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Vaijayanthi S
  First published: