அன்றைய தி.மு.க ஆட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு பணிகளில் 20% முன்னுரிமை அளித்து சட்டம் இயற்றப்பட்டது. தற்போது அந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவர சில மாதங்களுக்கு முன் முடிவு செய்தது. அதன்படி அரசு பணிகளில் குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி மட்டும் அல்லாமல் 1ம் வகுப்பிலிருந்தே முழுவதும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே 20 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற முடியும்.
இதன் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் அரசு பணிகளில் இனி வரும் காலங்களில் 20 சதவீத இட ஒதுக்கீடு முறை பொருந்தும். தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் கேட்டு தமிழக ஆளுநருக்கு சட்டத் திருத்தம் அனுப்பி வைக்கப்பட்டது.
சில மாதங்களாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்