ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா : ஒப்புதல் தராத ஆளுநர் - வாபஸ் பெற்ற தமிழ்நாடு அரசு!

கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதா : ஒப்புதல் தராத ஆளுநர் - வாபஸ் பெற்ற தமிழ்நாடு அரசு!

ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக, சட்டத்துறை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அதை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா கடந்த ஜனவரி மாதம், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் நிலையில் அதை 3 ஆண்டுகளாக குறைக்கும் விதிகள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.  இந்நிலையில், கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக, சட்டத்துறை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

மசோதா திரும்பப் பெறப்படுவதால் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகவே நீடிக்க உள்ளது. ஏற்கெனவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா உட்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் நிலையில் இந்த மசோதா திரும்ப பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi, Tamil Nadu Governor