மத்திய அரசின் நல் ஆளுமை விருதை பெற்ற முதலமைச்சருக்கு ஆளுநர் பாராட்டு!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

  • News18
  • Last Updated :
  • Share this:
மத்திய அரசின் நல் ஆளுமை விருதை பெற்ற தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பாராட்டுகளை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு  மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதையே முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக புகழாரம் சூட்டினார்.

”நல் ஆளுமை” நாளான டிசம்பர் 25-ம் தேதி அன்று, மத்திய அரசால் முதன்முறையாக வெளியிடப்பட்ட நல் ஆளுமை திறனுக்கான குறியீட்டு பட்டியலில் ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டினார்.

மேலும், இந்தியா டுடே பத்திரிகை நவம்பர் 2019-ல் ”மாநிலங்களின் நிலை” என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்விலும் ”ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க மாநிலம்” என்று இரண்டாவது ஆண்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்க வேண்டும் என்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் குறிக்கோளினை தமிழ்நாடு அரசு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: