தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் - 7 பேர் விடுதலை குறித்து அறிவிப்பு வெளியாகுமா?

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

டெல்லியில் பிரதமரைச் சந்தித்த ஆளுநர் , பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்று காலையில் குடியரசுத்துணைத்தலைவர் ஆகியோரையும் அடுத்தடுத்து சந்தித்தார்.

 • Share this:
  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் பிரதமரைச் சந்தித்துவிட்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்று காலையில் குடியரசுத்துணைத்தலைவர் ஆகியோரையும் அடுத்தடுத்து சந்தித்தார்.

  டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் நடந்து வரும் முக்கிய நிகழ்வுகள் குறித்து பிரதமரிடம் விவாதித்துள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க காலதாமதம் ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் ஆளுநருக்கு கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து புதனன்று ஆளுநர் டெல்லி சென்றார்.  டெல்லியில் பிரதமரைச் சந்தித்த ஆளுநர் , பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இன்று காலையில் குடியரசுத்துணைத்தலைவர் ஆகியோரையும் அடுத்தடுத்து சந்தித்தார். மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி, வேல் யாத்திரை மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, இந்த சந்திப்பின்போது பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 7 பேர் வழக்கு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Rizwan
  First published: