சம வேலைக்கு சம ஊதியம்: 4-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்களை திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி 4வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் சோர்வு காரணமாக இதுவரை 110 ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2009-ம் ஆண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்ட 6வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடு இருந்ததாகவும், அது இதுவரை களையப்படவில்லை எனக் கூறி கடந்த திங்கள்கிழமை முதல் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை டிபிஐ வளாகத்தில் 4-வது நாளாக நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்களை திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் நேற்று போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜே.ராபர்ட் தெரிவித்தார்.

இதனிடையே, பெண்கள் பலரும் உடல் நலிவுற்று இருப்பதால் இதுவரை 110 ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு நேற்று இரவு 8 மணி முதல் தண்ணீர் மட்டும் அருந்தியவாறு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: