தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்துப் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சமீபத்தில் தான் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்காக சென்றதாகவும் அந்த கல்லூரியின் முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார். அதற்கு காரணம் தன்னுடைய உறவுக்காரப் பெண் ஒருவர் வீட்டில் வரதட்சணை கொடுமை செய்ததால் தற்கொலை செய்யும் முடிவுக்கு சென்றதாகவும், கணவர் வீட்டில் இருந்து தாய் வீடு திரும்ப வழி இல்லை என கூறியதாகவும், அதைக் கேட்ட அப்பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு, வெளியில் வந்தால் தமிழக அரசின் பேருந்து வரும் அதில் ஏறி இலவசமாக பயணித்து நம் வீட்டிற்கு வந்துவிடலாம் என கூறியதாகவும் அதனால் அந்தப் பெண் உயிர் காப்பாற்றப் பட்டதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும், உதயநிதி குறித்து பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவர் முதலமைச்சரின் மகன். நாளை தினம் அவர் இந்த அவைக்கு அமைச்சராக வரவேண்டுமென எதிர்பார்க்கப்படுபவர். அவர் எந்த துறை மீதும் பேசியிருக்கலாம், ஆனால் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்டு யாரும் திரும்பிப்பார்க்காமல், கவனிக்கப்படாமல் இருக்கும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசினார். அவரின் குரல் வருங்காலத்தில் ஏற்றம்பெறும், என்றார்.
Also Read :
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்பு - வானிலை ஆய்வு மையம்
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தாமல் இருந்தாலே அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பிரஷர் வராது என நகைச்சுவையாக குறிப்பிட்ட அமைச்சர் சிவசங்கர், 14வது ஊதிய குழுவின் பேச்சுவார்த்தை வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்கள் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டு, ஜன்னலில் தொங்குவதை தடுப்பதற்கு, சென்னை மாநகரப் பேருந்துகளில் இருக்கும் தானியங்கி கதவுகள் போல், அனைத்து பேருந்துகளிலும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.