Home /News /tamil-nadu /

மாணவிகளுக்கு இழிசெயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாணவிகளுக்கு இழிசெயல் நடந்தால் அரசு வேடிக்கை பார்க்காது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

MK Stalin: மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது, தலை நிமிரும் எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் மாணவிகளுக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக இழிசெயல் நடந்தால் அதை அரசு வேடிக்கை பார்க்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கலைக் கல்லூரியின் பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர்,கொரோனா தொற்றால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்பட கூடாது என்பதால், என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

    அண்மை காலமாக நடந்த சில நிகழ்வுகள் தனக்கு மன வேதனையை தந்ததாகவும், கல்வி நிறுவனங்களை நடத்துவோர் அதை வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும் என்றும் கூறினார். மாணவர்களுக்கு பட்டம் மட்டும் போதாது எனவும், தன்னம்பிக்கையும் மன உறுதியும் வேண்டும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.மாணவிகளுக்கு மன, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது. குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தரும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை.. திருமாவளவன் குற்றச்சாட்டு

    தொல்லைகளையும், அவமானத்தையும் மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், சோதனைகளை வெல்லும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவே கூடாது, தலை நிமிரும் எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: CM MK Stalin, College

    அடுத்த செய்தி