• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சிவகங்கையில் போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள்

போக்குவரத்து ஊழியர்கள்

அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல மே மாத சம்பளத்தையும்  முழுமையாக வழங்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Share this:
சிவகங்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நடத்துனர்கள் ஓட்டுநர்கள்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 11 டெப்போக்கள் உள்ளது. இந்த டெப்போக்களில்  4000 பேர் பணிபுரிகிறார்கள் கடந்த மாதம் முறையாக சம்பளம் கிடைத்தது. இந்த மாதம் சம்பளத்தில் விடுப்பை கழித்து வழங்க போவதாக அரசு அறிவித்துள்ளதாக தெரிந்தால் டெப்போ கிளையின் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல மே மாத சம்பளத்தையும்  முழுமையாக வழங்க வேண்டும்  தொழிலாளர்களின் விடுப்பை கழித்து வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும் சிறப்பு விடுப்பு அமல்படுத்த வேண்டும் என்றும்  கொரோனா ஊரடங்கு காலத்தில் பராமரிப்புப் தொழிலாளர்களை 100% பணிக்கு வரச்சொல்லி நிர்பந்தம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கத்தைத் தவிர அனைத்து தொழிற்சங்கத்தினரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் போலவே இந்த மாதமும் முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்பது போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. பேச்சுவார்த்தையில் அரசு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி உள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube





 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: