Home /News /tamil-nadu /

கிராமத்து மாணவர்களை தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் பணியில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

கிராமத்து மாணவர்களை தேடிச் சென்று பாடம் கற்பிக்கும் பணியில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

சீர்காழி அருகே அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே தேடி சென்று பாடம் கற்பித்து வருகின்றனர்.

சீர்காழி அருகே அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே தேடி சென்று பாடம் கற்பித்து வருகின்றனர்.

சீர்காழி அருகே அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே தேடி சென்று பாடம் கற்பித்து வருகின்றனர்.

  • 2 minute read
  • Last Updated :
கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்து இன்றோடு 5 மாதங்கள் ஆகின்றது. பொதுமுடக்கத்தையொட்டி பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. 1 முதல் 9-ம்வகுப்பு வரை தேர்வு எழுதாமல் அனைத்து மாணவ மாணவிகளும் தமிழக அரசு தேர்ச்சிபெற்றதாக அறிவித்தது.

10-ம் வகுப்பு பொதுதேர்வும் நடத்த முடியாத சூழ்நிலையால் 10-ம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் முறையை தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை ஸ்மார்ட் போன் மூலம் எடுத்து வருகிறது.

ஆனால் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி தங்கள் கற்றலை கல்வி தொலைக்காட்சி வாயிலாக பயில்கின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கடவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இராமகிருபா உதவிபெறும் நடுநிலைப்பள்ளியின் செயலர் சத்துருகன்குமார் தங்கள் பள்ளயில் பயிலும் ஏழை மாணவ மாணவிகள் பொதுமுடக்கத்தினால் முடங்கிவிடாமல் கல்வி கற்கவேண்டும் என எண்ணினார்.



அதன்படி, தங்கள் பள்ளியில் பயிலும் 1-ம் முதல் 8-ம் வகுப்பு வரையிலான 114 மாணவ மாணவிகளுக்கு கல்வியை தேடி சென்று அளித்திட பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 9 பேரும் மாணவர்கள் கல்விநலனில் அக்கறை கொண்டு கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி திறக்கப்படாத நிலையில் வாரம் ஒருமுறை மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கற்பித்தல் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அப்பள்ளியில் பயிலும் கோடங்குடி, குளத்திங்கநல்லூர், வாசசேகரநல்லூர், காந்திநகர்கடவாசல், கடவாசல் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று தங்கள் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை சொல்லி தருகின்றனர். இந்த அனைத்து மாணவ மாணவிகளையும் செல்லிடைபேசி மூலம் ஒன்றிணைத்து அதில் வீட்டு பாட வேலைகளை தருகின்றனர்.



பின்னர் நேரில் சென்று அந்த வீட்டு பாட வேலைகளை முடித்துள்ளரா என ஆய்வு செய்து பாடங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு நோட்டுகள், வாய்ப்பாடு மற்றும் எழுது பொருட்கள் கொடுத்தும், எளிய பாடப்பகுதிகளை ஜெராக்ஸ் நகல் கொடுத்து எழுதுதல் மற்றும் படித்தல் பணிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க...சென்னையில் டி.எஸ்.பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை



இவ்வாறு மாணவர்களின் வீடு தேடி சென்று பாடம் நடத்திடும் இந்த செயல்பாடுகள் பெற்றோர்களிடத்தில் மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற மாணவ மாணவிகளுக்கும் எளிதாக தடையின்றி கல்வி கிடைத்து வருகிறது.
First published:

அடுத்த செய்தி