Home /News /tamil-nadu /

சென்னை புத்தகக் காட்சியில் விறுவிறு விற்பனையில் அரசுப் பாடப் புத்தகங்கள்!

சென்னை புத்தகக் காட்சியில் விறுவிறு விற்பனையில் அரசுப் பாடப் புத்தகங்கள்!

அரசு பாட புத்தகங்கள் அரங்கு

அரசு பாட புத்தகங்கள் அரங்கு

  • News18
  • 1 minute read
  • Last Updated :
சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் அரசுப் பாட புத்தகங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. போட்டித்தேர்வு எழுத விரும்பும் பலர்   நீண்ட வரிசையில் நின்று பாடப்புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர்.  

சென்னை புத்தககாட்சி கடந்த 9-ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. 300-க்கும் மேலான அரங்குகள் அமைக்கப்பெற்றுள்ளது. இதில் தமிழக அரசின் பாடநூல் கழக அரங்கு பலரின் விருப்ப தேர்வாக உள்ளது. காலை முதல் இரவு வரை ஏராளமானோர்  நீண்ட வரிசையில் நின்று பாடப்புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர்.

நாளொன்றுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் முதல், 4 லட்சம் ரூபாய் வரை பாடப்புத்தகங்கள் விற்பனையாகின்றன என்று பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய போட்டித்தேர்வுகள் மற்றும் இதர போட்டித்தேர்வுகளுக்கு  தயாராகும்  பலர் சென்னை மட்டுமின்றி  வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் பாடப் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

தேவையான பாடப் புத்தகங்கள் புத்தகக் காட்சியில் கிடைப்பதற்கு  தமிழக அரசு உரிய ஏற்பாடு செய்திருப்பது பலரிடமும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நாளை வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதால், அதற்குள் மேலும் 20 லட்சம் ரூபாய் அளவிற்கு புத்தகங்கள் விற்பனை நடக்கும் என பாடநூல் கழகம் எதிர்பார்க்கிறது.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chennai book fair

அடுத்த செய்தி