தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தால் ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாய் விளங்கும் ஏரிகளை முறையாக பராமரிக்காமல் விட்டதே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

குடிநீர் திட்டங்களை ஏற்படுத்துவதிலும், கடல் நீரை குடிநீராக்கும் முயற்சியிலும் உள்ளாட்சித்துறை அக்கறை காட்டவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின்,  இதனால் கோடை வெயிலில் தாய்மார்கள் தண்ணீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், கூட்டுக்குடிநீர் திட்டங்களை முறையாக பராமரிக்கவும் இந்த அரசு தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், கிருஷ்ணா நதி நீரைப் பெறவும், காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெறவும் தமிழக அரசு தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பொதுமக்களின் துன்பங்களை முதலமைச்சரோ, உள்ளாட்சித்துறை அமைச்சரோ கண்டுகொள்வில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட வேண்டும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பொதுமக்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்ற திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also see... மு.கருணாநிதி VS மு.க.ஸ்டாலின் வரலாறு திரும்பிய கதை


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: