அம்பேத்கர் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் - ரவிக்குமார் எம்பி கோரிக்கை

கல்வி வளாகங்களில் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரிவான கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.

அம்பேத்கர் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் - ரவிக்குமார் எம்பி கோரிக்கை
ரவிக்குமார், பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
  • News18
  • Last Updated: March 17, 2020, 12:39 PM IST
  • Share this:
விழுப்புரத்தில் அம்பேத்கர் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

எஸ்.சி மாணவர்களுக்கென புதிதாக மத்திய அரசு ஆரம்பிக்கவுள்ள அம்பேத்கர் நவோதயா பள்ளியை விழுப்புரத்தில் தொடங்க வேண்டும் என்று சமூகநலத்துறை அமைச்சரிடம் அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

150 சிறப்புப் பள்ளிகள் நிறுவப்பட இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் “அம்பேத்கர் நவோதயா பள்ளிகள் பட்டியலின மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் நிறுவப்படும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி விழுப்புரத்தில் 30% எஸ்சி மக்கள் தொகை இருந்தது. அதனால், அம்பேத்கர் நவோதயா பள்ளி ஒன்றை விழுப்புரம் மாவட்டத்தில் நிறுவ வேண்டும்” என்றார்.


மேலும், கல்வி வளாகங்களில் மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரிவான கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் இந்த சிறப்புப் பள்ளிகளில் திறன் மேம்பாடுக்கான பாடங்களை, குறிப்பாக மொழி மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்க்கும் பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் கோரினார்.

Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading