Home /News /tamil-nadu /

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டிற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டிற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

தமிழகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி தனிமனித இடைவெளியுடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அரசை வலியுறுத்தியுள்ளார்.

    பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலால் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தமாட்டோம் என இந்து அமைப்புகள் தலைமைச் செயலரிடம் கூறிய பிறகும் சிலை நிறுவி வழிபட தடை விதிக்கப்பட்டது வேதனை தருவதாக எல்.முருகன் கூறியுள்ளார். தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே அரசு தடை போட்டிருப்பதாகவும் அவர் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.

    1983 க்கு முன்பிருந்தே நடைபெறும் விநாயகர் சதுர்த்தி கால சிறப்பு வழிபாட்டை அனுமதிப்பது குறித்து தமிழ்நாடு அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமெனவும் எல்.முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் படிக்க...தமிழகத்தில் கொரோனா படிப்படியாக குறையும் மாவட்டங்கள் எவை?

    அத்துடன் தனிமனித இடைவெளியோடும், விழிப்புணர்வோடும் மக்கள் விநாயகரை வழிபடுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: BJP, Vinayagar Chathurthi

    அடுத்த செய்தி