• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிவகங்கையில் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் மணல் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • Share this:
சிவகங்கையில் அனைத்து விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரானா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் விவசாயிகளுக்கு எந்தவித ஒதுக்கீடும் இல்லை என்று கூறி மத்திய அரசை இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

அந்த அமைப்பின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும்  மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அத்தோடு, காவிரி நதிநீர் பங்கீட்டை பாதிக்கும் வகையில் ஜல்சந்தியுடன் காவிரி ஆணையத்தை இணைப்பது கைவிடப்பட வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.

மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்புதல், அவர்களுக்கு உணவு மற்றும் வேலை உறுதி செய்யப்படுதல் அவசியம் என்று வலியுறுத்திய விவசாயிகள், பிரதமரின் கிசான் உதவித் தொகை 6 ஆயிரத்தை 18 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளனர். இப்படியாக 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷமிட்டனர்.

சிவகங்கையில் கடந்த 10 நாட்களில் 30க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளுக்கு சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, ஆற்று மண்னைக் கொள்ளையடித்து ஒரு லோடு 60 ஆயிரம் விற்பதற்கு  விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: