ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கம் செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கம் செய்யக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

இடைநீக்க காலத்தில் எந்தப் பணியும் செய்யாமல் ஜீவனப்படியைப் பெறுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கத்திலேயே வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலக கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அன்னபூரணி என்பவர் 2012ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தன்னைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பணியிடை நீக்கம் செய்து வைத்திருப்பது நியாயமற்றது என்பதால், மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிடக்கோரி கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், அரசு ஊழியரை நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது என்பது விரைவான விசாரணை, நியாயம் பெறும் உரிமையைப் பாதிக்கும் எனக் குறிப்பிட்டு, அன்னபூரணிக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டார்.

  அரசு ஊழியர்களை நீண்ட காலம் பணியிடை நீக்கம் செய்து வைத்திருப்பதை அரசு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள், இடைநீக்க காலத்தில் எந்தப் பணியும் செய்யாமல் ஜீவனப்படியைப் பெறுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: Government, Judgement, Madras High court