ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 53 லட்சமாக உயர்வு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 53 லட்சமாக உயர்வு: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறைக்கு   தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வேறு எந்த ஆட்சியில் இந்த அளவுக்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பின்னர் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் வரை அதிகரித்துள்ளதுள்ளதாக தற்போது 53 லட்சம் பேர் பயின்று வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். வரும் 5 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிவறை உட்பட  18 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் அவர் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி முப்பெரும் விழா நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், "அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்று தடுப்பு, விடுமுறைகளுக்கு பின் 6 லட்சம் உயர்ந்து தற்போது 53 லட்சமாக உள்ளது. அதிகபடியான ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

பள்ளிக்கல்வித்துறைக்கு   தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. வேறு எந்த ஆட்சியில் இந்த அளவுக்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது கிடையாது. தமிழகத்தில் தற்போது  10 ஆயிரத்து 300க்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளபடுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிப்பிடங்கள் உட்பட 18 ஆயிரம் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி - 2வது நாள் போட்டியில் டெல்லி, பஞ்சாப் அணிகள் வெற்றி

பேரறிவாளன் விடுதலை தொடர்பான கேள்விக்கு, ‘பேரறிவாளன் விடுதலை குறித்து அரசியல் பார்க்காமல் அனைவரும் குரல் கொடுத்துள்ளனர். ராஜூவ் காந்தி குடும்பத்தினரே  மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தமிழனாக எனக்கு பேரறிவாளன் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: சரவணன் - நாகர்கோவில்

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, DMK, Government school