100 மாணவர்களாவது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வார்கள் - செங்கோட்டையன்

100 மாணவர்களாவது அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வார்கள் என செங்கோட்டையன் தகவல்.

100 மாணவர்களாவது அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வார்கள்  - செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
  • News18
  • Last Updated: March 13, 2020, 8:50 AM IST
  • Share this:
தமிழக அரசின் நீட் பயிற்சி வகுப்பு மூலம், இந்த ஆண்டு 100 மாணவர்களாவது அரசு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் ஈஸ்வரப்பன், தனியார் பள்ளியின் தரம் அரசு பள்ளிகளில் கிடைப்பதில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளியின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் நீட் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். இந்த ஆண்டு நீட் தேர்விற்காக 7500 மாணவர்கள் தேர்வாகியுள்ளதாகவும், அவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு பின் நீட் தேர்வை எதிர்கொள்ள முழு அளவில் பயிற்சியளிக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading