தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்பை வழங்க வகைசெய்யும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வியில் சேர்வது கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஏற்கனவே மருத்துவபடிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அதைப் போலவே பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் அரசு சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவர்களின் பள்ளிக்கல்வி அடைய அதிகமான வசதிகள் மற்றும் பல்வேறு தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதற்கு முன் வைத்து நடத்தும் கட்டுரையானது மேற்கொண்டு தேவைப்படுகின்றன ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
Must Read : அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்கவேண்டும் - தமிழக அரசு உத்தரவு
தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களோடு போட்டியிடுவதில் அரசு பள்ளி மாணவர்கள் பின் தங்குகின்றனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதோடு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மருத்துவம் மீன்வளம், சட்டம் போன்ற தொழில் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க சட்ட முடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த சட்டமுன் வடிவை ஒரு மனதாக ஆதரிக்கிறோம் என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.