• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அதிகரித்த அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் அதிகரித்த அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  • Share this:
    கடந்த ஆண்டு 1,633 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 2,675 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நாடு முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் 1ம் தேதி வெளியாகின. அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 11,566 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்தனர்.

    அவர்களுள் 10,853 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளிகளைச் சார்ந்த 1,709 மாணவர்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 966 மாணவர்களும் என மொத்தம் 2,675 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகமாகும். கடந்த ஆண்டு 1,633 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: