நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு...!

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கடும் சரிவு...!

மாதிரிப் படம்

2020-ம் ஆண்டுக்கான தேர்வில் 7,500 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு பதிவுசெய்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக சரிந்துள்ளது கல்வித் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வதற்காக மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை அரசு நடத்திவந்தது.

  இதையடுத்து, நீட் தேர்வில் பங்கேற்க கடந்த 2018-ம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 3 ஆயிரத்து 700 பேர் பதிவுசெய்திருந்த நிலையில், 2019-ம் ஆண்டில் 19 ஆயிரத்து 355-ஆக அதிகரித்தது.

  இந்நிலையில், இந்த ஆண்டில் நடைபெறும் தேர்வுக்கு 7 ஆயிரத்து 500 பேர் மட்டுமே பதிவுசெய்துள்ளனர். நீட் பயிற்சி வகுப்புகளை அரசு மூடுவதன் காரணமாக நீட் தேர்வில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது கல்வித் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

   
  Published by:Sivaranjani E
  First published: