HOME»NEWS»TAMIL-NADU»government school students attacked the same school student in thiruvannamalai video released vai
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்: கண்மூடித்தனமாகத் தாக்கும் பரபரப்பு வீடியோ
திருவண்ணாமலை அருகே, அரசுப் பள்ளி வளாகத்தில்,10ம் வகுப்பு மாணவனை, 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் முன்னாள் மாணவனும் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனின் அண்ணனுக்கும், அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் இன்னொரு மாணவனுக்கும் இடையே சிறுசிறு தகராறுகள் ஏற்பட்டுள்ளன. அந்த தகராறில், கடந்த 16ம் தேதி பள்ளி வளாகத்தில் வைத்து 10ம் வகுப்பு மாணவனுடன் 12ம் வகுப்பு மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உச்சகட்டமாக 10ம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். கூடவே முன்னாள் மாணவன் ஒருவரும் தாக்கியுள்ளார். இதை சக மாணவன் வீடியோ எடுத்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியர் மற்றும் போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாணவர்கள் நான்கு பேரின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பப்பட்டனர். இந்த நிலையில்தான், மாணவன் தாக்கப்பட்ட வீடியோ காட்சி, திங்கட்கிழமை காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
இதையறிந்த மாவட்ட கல்வித்துறை, இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட 4 மாணவர்களையும் பள்ளி தலைமையாசிரியர் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.